

இந்திய கால்பந்து அணியின் புதிய கேப்டனாக குர்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தி வந்த சுனில் சேத்ரி அண்மையில் அவரது ஓய்வு முடிவை அறிவித்தார். 39 வயதாகும் சுனில் சேத்ரி, ஃபிஃபா உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச்சுற்றில் குவைத் அணிக்கு எதிரான போட்டியுடன், தான் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சுனில் சேத்ரி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்திய கால்பந்து அணியில் கேப்டனாக கோல் கீப்பர் குர்பிரீத் சிங், இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தோஹாவில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்று போட்டியில் இந்திய அணி கத்தாரை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் அணியைக் கேப்டனாக குர்பிரீத் சிங் வழிநடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.