அமெரிக்காவுக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா!

அமெரிக்காவுக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா.
அமெரிக்காவுக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா!
படம் | பிடிஐ

டி20 உலகக் கோப்பை போட்டியின் அமெரிக்கா - தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 சுற்றில் இன்று மோதின.

நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியின் குரூப் சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், "சூப்பர் 8' சுற்று ஆட்டங்கள் இன்று முதல் (ஜூன் 19) தொடங்கியது.

இதில் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - அமெரிக்கா மோதின.

படம் | பிடிஐ

டாஸ் வென்ற அமெரிக்கா பந்து வீச்சினை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்கா தரப்பில் களமிறங்கிய குயிண்டன் டிகாக் 40 பந்துகளில் 74 ரன்களும் (7 பவுண்டரி, 5 சிக்ஸர்), ரீசா ஹென்ரிக்ஸ் 11 ரன்களும், கேப்டன் மார்க்ராம் 46 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து வந்த கிளாசன் 3 சிக்ஸருடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

படம் | பிடிஐ

20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.

அமெரிக்க அணி தரப்பில் நேத்ரவால்கர், ஹர்மீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com