இந்திய அணி வீரர்கள் (கோப்புப் படம்)
இந்திய அணி வீரர்கள் (கோப்புப் படம்)

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது.
Published on

இந்திய அணி வருகிற நவம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் நடைபெறுவதை பிசிசிஐயும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளன.

இந்திய அணி வீரர்கள் (கோப்புப் படம்)
உலகக் கோப்பையில் ஹாட்ரிக்! பாட் கம்மின்ஸ் சாதனை!

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் வருகிற நவம்பர் 8 முதல் தொடங்கவுள்ளது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தென்னாப்பிரிக்க ரசிகர்கள் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள் (கோப்புப் படம்)
குறைந்த போட்டிகளில் விராட் கோலியின் உலக சாதனையை சமன்செய்த சூர்யகுமார்!

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறியதாவது: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே எப்போதும் வலிமையான பிணைப்பு இருக்கிறது. இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்க ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெறுகிறார்கள். தென்னாப்பிரிக்க வீரர்களுக்கும் இந்திய ரசிகர்களிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் மிகச் சிறப்பானதாக இருக்கும் என்றார்.

டி20 தொடர் விவரம்

முதல் டி20 போட்டி - நவம்பர் 8

2-வது டி20 போட்டி - நவம்பர் 10

3-வது டி20 போட்டி - நவம்பர் 13

4-வது டி20 போட்டி - நவம்பர் 15

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com