உலகக் கோப்பையில் ஹாட்ரிக்! பாட் கம்மின்ஸ் சாதனை!
டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்கள் வரிசையில் இணைந்துள்ளார் பாட் கம்மின்ஸ்.
நார்த் சௌண்ட்டில் அமைந்துள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்துடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் அடித்திருந்தபோது, ஆட்டத்தின் இடையே மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
தொடர் மழையின் காரணமாக டக்வொர்த் லீவிஸ் விதிமுறையின் படி ஆஸி. 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த கம்மின்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பாட் கம்மின்ஸ் எடுத்த விக்கெட்டுகள்: மஹ்முதுல்லா (17.5), மெஹிதி ஹசன் (17.6), டவ்ஹித் ஹிரிதோய் (19.1)
இதன் மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பையில் முதன்முதலாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் 2ஆவது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.
இதற்கு முன்பாக பிரட் லீ 2007 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் உலகக் கோப்பையில் ஹாட்ரிக் எடுத்தவர்கள் பட்டியல்:
1. பிரட் லீ (2007)
2. கர்டிஸ் காம்பர் (2021)
3. வனிந்து ஹசரங்கா (2021)
4. ககிசோ ரபாடா (2021)
5. கார்த்திக் மெய்யப்பன் (2022)
6. ஜோஷ் லிட்டில் (2022)
7. பாட் கம்மின்ஸ் (2024)