நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு! நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு! குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! விஜய் பேச்சுபுஸ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்! நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
/

கோப்பையை வெல்லுமா இந்தியா? பரபரப்பான கட்டத்தில் இறுதிப்போட்டி!

இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.

News image

படம் | ஐசிசி எக்ஸ் தளப் பதிவு

Updated On :29 ஜூன் 2024, 10:51 pm IST

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த சூழலில் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் அக்‌ஷர் படேல். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடியது. விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, அக்‌ஷர் படேல் அதிரடியாக விளையாடினார். அதிரடியாக விளையாடிய அக்‌ஷர் படேல் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன்பின், விராட் கோலியுடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளது.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணி,11.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 100 ரன்களை எட்டியது.

இறுதிப்போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தால் முதன்முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்கும் தென்னாப்பிரிக்கா. இந்த நிலையில், விக்கெட்டை வீழ்த்தி ரன் ரேட்டை கட்டுப்படுத்த இந்திய அணி பந்துவீச்சாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.