தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

10-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த 4-வது ஆஸ்திரேலிய இணை!

கேமரூன் கிரீன் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் இணை 10-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது.

News image
Updated On :1 மார்ச் 2024, 4:05 pm

DIN

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேமரூன் கிரீன் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் இணை 10-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் கிரீன் 174 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். 10-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிரீன் மற்றும் ஹேசில்வுட் 116 ரன்கள் சேர்த்தனர்.

டெஸ்ட் போட்டிகளில் 10-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு ஆஸ்திரேலிய அணியால் எடுக்கப்பட்ட 4-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

டெஸ்ட் போட்டிகளில் 10-வது விக்கெட் பார்ட்னர்ஷிப் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் விவரம்

1. பிலிப் ஹியூஸ் & அஹர் - 163 ரன்கள் - இங்கிலாந்துக்கு எதிராக, 2013

2. டெய்லர் & மைலி - 127 ரன்கள் - இங்கிலாந்துக்கு எதிராக, 1924

3. டஃப் & ஆம்ஸ்டிராங் - 120 ரன்கள் - இங்கிலாந்துக்கு எதிராக, 1902

4. கேமரூன் கிரீன் & ஜோஸ் ஹேசில்வுட் - 116 ரன்கள் - நியூசிலாந்துக்கு எதிராக, 2024

5. கில்லெஸ்பி & கிளன் மெக்ராத் - 114 ரன்கள் - நியூசிலாந்துக்கு எதிராக, 2004

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.