பிசிசிஐ-க்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன்!

பிசிசிஐ-ன் மத்திய ஒப்பந்தத்துக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பேசியுள்ளார்.
பிசிசிஐ-க்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன்!

இந்திய அணியில் இடம்பெறுவதற்கு உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும் என்ற பிசிசிஐ-ன் முடிவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வரவேற்றுள்ளார்.

பிசிசிஐ-ன் இந்த முடிவினால் சில வீரர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பிசிசிஐ-ன் இந்த புதிய முடிவினால் சில வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். சில வீரர்கள் காயமடைந்ததாக உணர்வார்கள். ஆனால், நாட்டுக்கு முன்பு எந்த ஒரு விஷயமும் பெரிது கிடையாது. உள்ளூர் போட்டிகளைப் பாதுகாக்க பிசிசிஐ எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிசிசிஐ-க்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன்!
அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்: ஆஸி. வீரர் நேதன் லயன் புதிய சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் இடம் பிடித்தவுடன் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை. இதனைப் பார்க்கும்போது உள்ளூர் போட்டிகளின் மதிப்பு குறைகிறது என வருத்தமாக இருக்கும். சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தங்களது மாநிலத்துக்காக விளையாடுவது இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றார்.

அண்மையில் வெளியிடப்பட்ட 2023-24 ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com