
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸி. வீரர் நேதன் லயன் புதிய சாதனைப் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல சுழல்பந்து வீச்சாளர் நேதன் லயன் (36) 128 போட்டிகளில் விளையாடி 521 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 5 விக்கெட்டுகளை 23 முறையும் 10 விகெட்டுகளை 4 முறையும் எடுத்து அசத்தியுள்ளார்.
2011இல் இல்ங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் நேதன் லயன். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடி வருகிறார். சமீபத்தில் 500 விக்கெட்டுகள் எடுத்தபோது ஆஸ்திரேலியாவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறினார் நேதன் லயன்.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் வீரர் கோர்ட்னி வால்ஷைப் பின்னுக்குத் தள்ளி அதிக டெஸ் விக்கெட் வரிசையில் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்திய வீரர்கள் அனில் கும்ப்ளே 4வது இடத்திலும் ரவி அஸ்வின் 9வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியல்:
முத்தையா முரளிதரன் - 800
ஷேன் வார்னே- 708
ஜேம்ஸ் ஆண்டர்சன் - 698
அனில் கும்ப்ளே - 619
ஸ்டூவர்ட் பிராட் - 604
க்ளென் மெக்ரத் - 563
நேதன் லயன் - 521
கோர்ட்னி வால்ஷ் - 519
ரவி அஸ்வின் - 507
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.