கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

5வது டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணி: பந்து வீச்சாளர் மாற்றம்!

இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

இங்கிலாந்து அணி

படம்: ஐசிசி

Updated On :6 மார்ச் 2024, 12:16 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் 3-1 என இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. கடைசி ஆட்டம் தா்மசாலாவில் வியாழக்கிழமை (மாா்ச் 7) தொடங்குகிறது. அதில் களம் காணும் இந்தியாவின் அஸ்வின், இங்கிலாந்தின் போ்ஸ்டோ ஆகியோருக்கு அது 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது.

இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ராபின்சன் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 4வது டெஸ்டில் 58 ரன்கள் அடித்த ராபின்சன் ஒரு விக்கெட்டும் எடுக்காததால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இங்கிலாந்து அணி:

ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட்,ஆலி போப், ஜோ ரூட், ஜானி பெயர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷொயிஃப் பஷீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.