அஸ்வின் மாதிரி ஒருவர் கிடைப்பது அரிது: ரோஹித் சர்மா

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அஸ்வினை பாராட்டி பேசியுள்ளார்.
அஸ்வின் மாதிரி ஒருவர் கிடைப்பது அரிது: ரோஹித் சர்மா

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அஸ்வினை பாராட்டி பேசியுள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் 3-1 என இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. கடைசி ஆட்டம் தா்மசாலாவில் வியாழக்கிழமை (மாா்ச் 7) தொடங்குகிறது. அதில் களம் காணும் இந்தியாவின் அஸ்வின், இங்கிலாந்தின் போ்ஸ்டோ ஆகியோருக்கு அது 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது.

இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

100 டெஸ்ட் போட்டியில் விளையாடுவது யாராக இருந்தாலும் முக்கியமான ஒரு சாதனை. ஒரு மைல்கல் என்றும் சொல்லலாம். அவர் எங்களுக்கு வெற்றியைப் பெற்றுத்தரும் நபராக இருந்திருக்கிறார். அவர் இந்திய அணிக்கு செய்ததுக்கு எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

அஸ்வின் மாதிரி ஒருவர் கிடைப்பது அரிது: ரோஹித் சர்மா
பால் பாயின் வெற்றியைக் கொண்டாடிய நியூசி. வீரர்: வைரல் விடியோ!

கடைசியாக அஸ்வின் விளையாடிய 5-7 வருடங்களில் அனைத்து தொடர்களிலும் சிறப்பாக பங்காற்றியிருக்கிறார். அவரைப் போன்ற ஒருவர் கிடைப்பது அரிது. அவரது 100வது டெஸ்ட் போட்டிக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது கடின உழைப்புக்கு கிடைத்த பலன் எப்போதும் நல்ல உணர்வை தரும்.

யு-19, யு-17 கால கட்டங்களில் இருந்தே எனக்கு அஸ்வினைத் தெரியும். அந்த நேரங்களில் அவர் திடக்க வீரராக களமிறங்குவார் பின்னர் பந்து வீசுவார். நான் சுழல் பந்து வீசுவேன்; தற்போது பேட்டராக மாறியுள்ளேன். நாங்கள் இப்படி மாறி மாறி விளையாடியுள்ளோம். இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது.

அஸ்வின் மாதிரி ஒருவர் கிடைப்பது அரிது: ரோஹித் சர்மா
ரிஷப் பந்த் தெரியுமா?: பேஸ்பால் பாணிக்கு உரிமை கோரிய பென் டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்த ரோஹித்!

ஒவ்வொரு போட்டியிலும் அஸ்வின் வளர்ந்துகொண்டே வருகிறார். அவரைபோன்ற ஒருவர் அணியில் இருக்கும்போது நாம் பெரிதாக யோசிக்க வேண்டியதில்லை. அவரிடம் பந்தினை கொடுத்தால் போது அவர் போட்டியை வழிநடத்துவார்.

போட்டிக்கு ஒன்றரை மணி நேரம் முன்பாக ஒரே ஒரு ஸ்டம்பினை வைத்து பயிற்சி செய்பவர் அஸ்வின். ராஜ்கோட் டெஸ்டில் அவருக்கு இக்கட்டான சூழ்நிலையிலும் அணிக்காக எதாவது செய்ய வேண்டும் என முன்வந்து செய்துகாட்டினார்.

நாளை நடைபெறவுள்ள கிரிக்கெட்  மைதானம்.
நாளை நடைபெறவுள்ள கிரிக்கெட் மைதானம்.

2011ஆம் ஆண்டு டெஸ்டில் அறிமுகமான அஸ்வின் 13 வருடங்களாக 99 போட்டிகளில் விளையாடி 507 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

5 விக்கெட்டுகள் (35 முறை) அதிக முறை எடுத்தவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறார். டெஸ்டில் அதிக முறை தொடர் நாயகன் விருதினை பெற்றவர்கள் வரிசையில் 2ஆம் இடத்தில் (10) இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com