பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பந்துவீச்சை மேம்படுத்தும் வழி என்ன தெரியுமா? என்ன சொல்கிறார் குல்தீப் யாதவ்!

தொடர்ச்சியாக அணியில் விளையாடினால் உங்களது பந்துவீச்சின் மீதான உங்கள் நம்பிக்கை அதிரிக்கும் என்றார் குல்தீப் யாதவ்.

News image
குல்தீப் யாதவ்
Updated On :7 மார்ச் 2024, 3:40 pm

DIN

தொடர்ச்சியாக அணியில் விளையாடினால் உங்களது பந்துவீச்சின் மீதான உங்கள் நம்பிக்கை அதிரிக்கும் என இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நீங்கள் தொடர்ச்சியாக அணியில் விளையாடினால் உங்களது பந்துவீச்சு மீது உங்களுக்கு அதிக நம்பிக்கை உண்டாகும். பந்துவீச்சு மீதான நம்பிக்கை மட்டுமின்றி ஆட்டம் குறித்த விழிப்புணர்வும் வந்துவிடும். உங்களது பந்துவீச்சை மெருகேற்றிக் கொள்ள அணியில் தொடர்ந்து விளையாடுவது அவசியம். பந்துவீச்சு என்பது உடல் தகுதியுடன் சம்பந்தப்பட்டது. உடலை நன்றாக வைத்துக் கொள்ள கடந்த 18 மாதங்களாக கடுமையாக உழைத்துள்ளேன். என்னுடைய உடல் தகுதியை மேம்படுத்திக் கொண்டதால் எனது பந்துவீச்சில் மாற்றங்களை கொண்டுவர முடிகிறது என்றார்.

கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறும் இந்த தர்மசாலா மைதானத்தில் குல்தீப் யாதவ் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது டெஸ்ட் பயணத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.