ஒரே தொடரில் இவ்வளவு சாதனைகளா? அசத்தும் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால்!

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஜெய்ஸ்வால் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
இந்திய வீரர் ஜெய்ஸ்வால்
இந்திய வீரர் ஜெய்ஸ்வால்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஜெய்ஸ்வால் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் இத்துடன் 4 ஆட்டங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்தியா 3-1 என தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. கடைசி ஆட்டம் தா்மசாலாவில் இன்று (மாா்ச் 7) தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கினைத் தேர்வு செய்தது. 57.4 ஓவர்களில் 218 க்கு ஆல் அவுட்டானது. இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4, ஜடேஜா 1 என விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

இந்தியா முதல் இன்னிங்ஸில் 135/1 ரன்கள் எடுத்துள்ளது.

இதில் 22 வயதான இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடிய 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும்.

இந்திய வீரர் ஜெய்ஸ்வால்
ஐபிஎல் 2024 உடன் ஓய்வை அறிவிக்கவுள்ள தினேஷ் கார்த்திக்!

இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் ஜெய்ஸ்வால்.

ஜெய்ஸ்வாலின் சாதனைகள்:

  • வேகமாக 1000 ரன்களை கடந்த 2வது இந்தியர்.

  • ஒரே டெஸ்ட் தொடரில் 700+ (712) ரன்கள் எடுத்துள்ளார்.

  • இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

  • 5 டெஸ்ட் போட்டிகளிலும் 50+ ரன்களை அடித்துள்ளார்.

  • ஒரே டெஸ்ட் தொடரில் 700+ ரன்கள் கடந்த வீரர்களில் 2ஆம் இடம் பிடித்துள்ளார்.

  • ஒரு தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் முதலிடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com