48வது சதத்தினை நிறைவு செய்த ரோஹித் சர்மா: அதிக சதத்தில் திராவிட்டுடன் சமநிலை!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது 48வது சதத்தினை நிறைவு செய்து ஆட்டமிழந்தார்.
48வது சதத்தினை நிறைவு செய்த ரோஹித் சர்மா: அதிக சதத்தில் திராவிட்டுடன் சமநிலை!
Shahbaz Khan
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது 48வது சதத்தினை நிறைவு செய்து ஆட்டமிழந்தார்.

ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் இந்தியாவின் கேப்டனாக இருப்பவர் ரோஹித் சர்மா. சமீபத்தில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்வார் என்று பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

தற்போது இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் 3-1 என முன்னிலையில் உள்ளது. 5வது டெஸ்டில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

48வது சதத்தினை நிறைவு செய்த ரோஹித் சர்மா: அதிக சதத்தில் திராவிட்டுடன் சமநிலை!
251 நாள்களுக்குப் பிறகு பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ்: முதல் பந்திலேயே விக்கெட்! (விடியோ)

தற்போது இந்தியா 76 ஓவர் முடிவில் 337/3 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தினை விட 119 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

முதல் இன்னிங்ஸில் 218 ரனகளுக்கு ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

டி20யில் 5 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 31 சதங்கள், டெஸ்டில் 12 என மொத்தம் 48 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ராகுல் திராவிட் சாதனையை சமன்படுத்தியுள்ளார்.

அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியல்:

சச்சின் டெண்டுல்கர் - 100,

விராட் கோலி- 80,

ரோஹித் சர்மா- 48,

ராகுல் திராவிட் -48.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com