251 நாள்களுக்குப் பிறகு பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ்: முதல் பந்திலேயே விக்கெட்! (விடியோ)

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், நீண்ட நாள்களுக்குப் பிறகு பந்து வீசி விக்கெட் எடுத்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்படம்: இங்கிலாந்து கிரிக்கெட் / எக்ஸ்

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், நீண்ட நாள்களுக்குப் பிறகு பந்து வீசி விக்கெட் எடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசவில்லை. ஜோ ரூட் பேட்டிங், பௌலிங்கில் அசத்திவருகிறார். இதன்மூலமாக ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜோ ரூட் பென் ஸ்டோக்கினை முந்தினார். இதனால் பலரும் ஸ்டோக்ஸை கிண்டல் செய்தனர்.

பென் ஸ்டோக்ஸ்
ஒரே தொடரில் இவ்வளவு சாதனைகளா? அசத்தும் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால்!

இந்நிலையில் 3-1 என முன்னிலையில் இருக்கும் இந்த டெஸ்ட் தொடரில் 5வது போட்டியில் 2ஆம் நாளில் பென் ஸ்டொக்ஸ் பந்து வீச வந்தார். அவர் வீசிய முதல் பந்திலியே ரோஹித் சர்மாவை வீழ்த்தினார். இதுதான் இன்றைய நாளின் முதல் விக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டியில் சிலெஸ்கே அணியில் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விளையாடாமலே இருந்தார். அவரது பௌலிங் மிகவும் முக்கியமானது. அதனால் அவரை அணியில் இருந்து விடுவித்தது சிஎஸ்கே குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்டோக்ஸ் பந்து வீசுவது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்தியா அணி 71 ஓவர் முடிவில் 315/3 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com