100-வது டெஸ்ட்டில் கேன் வில்லியம்சன் அரைசதம்; நியூசி. 40 ரன்கள் முன்னிலை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து 40 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து 40 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (மார்ச் 8) கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது. நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாம் லாதம் 38 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஸ் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

கேன் வில்லியம்சன்
5வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லபுஷேன் 90 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் டிம் சௌதி, பென் சியர்ஸ் மற்றும் கிளன் பிளிப்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. 100-வது போட்டியில் விளையாடும் கேன் வில்லியம்சன் அரைசதம் எடுத்தார். அவர் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். டாம் லாதம் 65 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கேன் வில்லியம்சன்
100வது டெஸ்ட்டில் அஸ்வின் புதிய சாதனை!

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 40 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com