தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

100வது டெஸ்ட்டில் அஸ்வின் புதிய சாதனை!

தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் கலக்கி வருகிறார்.

News image

ரவிசந்திரன் அஸ்வின் - Ashwini Bhatia

Updated On :9 மார்ச் 2024, 1:03 pm IST

தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் கலக்கி வருகிறார்.

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடரின் 5-ஆவது ஆட்டம், இந்திய ஸ்பின்னா் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து பேட்டா் ஜானி போ்ஸ்டோவுக்கு 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது.

இந்த இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் இத்துடன் 4 ஆட்டங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்தியா 3-1 என தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. கடைசி ஆட்டம் தா்மசாலாவில் மாா்ச் 7 தொடங்கியது.

இதில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 218க்கு ஆல் அவுட். இந்தியா 477. 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 145/8 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் எடுத்த அஸ்வின் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட் எடுத்து அசத்தி வருகிறார். இத்துடன் 36ஆவது முறையாக அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

இந்தியாவில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்தவர் வரிசையில் முதலிடம் பிடித்துள்ள அஸ்வின், உலக அளவில் ஆர்ஜெ ஆர்ட்லியுடன்(36) 3ஆம் இடத்தில் இருக்கிறார்.

முதலிடத்தில் முரளிதரன் (67 ), 2ஆம் இடத்தில் ஷேன் வார்னே (37) இருக்கிறார்கள். இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி விளையாடினால் அஸ்வின் வார்னேவின் இடத்தினைப் பிடிக்க அதிகம் வாய்ப்புள்ளது.

100வது டெஸ்ட் போட்டியில் (4+5) 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருப்பது மறக்க முடியாத ஒன்றாக இருப்பதாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை 13ஆவது முறையாக வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.