டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு இளம் வீரர்களுக்கு ராகுல் டிராவிட் கொடுத்த அறிவுரை!

டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது என இளம் வீரர்களுக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவுரை வழங்கினார்.
டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு இளம் வீரர்களுக்கு ராகுல் டிராவிட் கொடுத்த அறிவுரை!

டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது எனவும், அதில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஒற்றுமையாக இருப்பது அவசியம் எனவும் இளம் வீரர்களுக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவுரை வழங்கியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோல்வியுடன் தொடங்கிய இந்திய அணி அதன்பின் 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு இளம் வீரர்களுக்கு ராகுல் டிராவிட் கொடுத்த அறிவுரை!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்!

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: இங்கிலாந்துக்கு எதிரான இதுபோன்ற டெஸ்ட் தொடர்களை வெற்றி பெற வேண்டியுள்ளது. இந்த தொடர் கடினமானதாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் சில நேரங்களில் கடினமானதாக இருக்கும். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது. இந்தத் தொடரின் இறுதியில் மிகுந்த திருப்தி கிடைத்தது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கிடைத்த தொடர்ச்சியான 4 வெற்றிகள் திருப்தியைக் கொடுத்துள்ளது. இந்தத் தொடர் அற்புதமானதாக அமைந்தது.

டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு இளம் வீரர்களுக்கு ராகுல் டிராவிட் கொடுத்த அறிவுரை!
சொந்த மண்ணில் இந்தியாவை அசைக்க முடியவில்லை: பென் ஸ்டோக்ஸ்

இந்த டெஸ்ட் தொடரில் நிறைய இளம் வீரர்கள் இடம் பெற்றிருந்தீர்கள். நீங்கள் வெற்றிகரமாக செயல்பட ஒவ்வொரு வீரரும் உங்களுக்குத் தேவை. பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி நீங்கள் யாராக இருந்தாலும் உங்களின் வெற்றி அணியில் உள்ள மற்ற வீரர்களின் வெற்றியுடன் தொடர்புடையது.

ஒவ்வொருவரின் வெற்றிக்கும் உங்களது பங்களிப்பை வழங்க வேண்டிய அவசியமுள்ளது. அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல இந்த ஒற்றுமை மிகவும் அவசியம். இது உங்கள் வெற்றியோடு சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. மற்ற வீரர்கள் வெற்றி பெற நீங்கள் எவ்வாறு உதவுகிறீர்கள் என்பதும் முக்கியம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com