அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ் அதிரடி; டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
கோப்பையுடன் போஸ் கொடுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்
கோப்பையுடன் போஸ் கொடுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்

அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் மார்ஷின் அதிரடியான ஆட்டத்தால் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிரான தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட்17 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நான்காம் நாளான இன்று ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே டிராவிஸ் ஹெட் 18 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆஸ்திரேலிய அணி 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கோப்பையுடன் போஸ் கொடுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்
105 ரன்களுக்கு ஆட்டமிழந்த விதர்பா; ஆதிக்கம் செலுத்தும் மும்பை!

இதனையடுத்து, மிட்செல் மார்ஷ் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அபாரமாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இவர்கள் இருவரும் இணைந்து 140 ரன்கள் சேர்த்தனர். மிட்செல் மார்ஷ் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதன்பின் களமிறங்கிய பாட் கம்மின்ஸ் தனது பங்குக்கு 32 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. அலெக்ஸ் கேரி 98 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 32 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் பென் சியர்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மாட் ஹென்றி 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

கோப்பையுடன் போஸ் கொடுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்
பென் ஸ்டோக்ஸை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் அல்ல: இங்கிலாந்து முன்னாள் வீரர்

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா முழுவதுமாக கைப்பற்றியது. அலெக்ஸ் கேரி ஆட்டநாயகனாகவும், மாட் ஹென்றி தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com