பென் ஸ்டோக்ஸை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் அல்ல: இங்கிலாந்து முன்னாள் வீரர்

ரோஹித் சர்மாவை விட பென் ஸ்டோக்ஸ் சிறந்த கேப்டன் வீரர் என இங்கிலாந்து முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் அல்ல: இங்கிலாந்து முன்னாள் வீரர்

பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியைக் காட்டிலும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி நன்றாக இருந்ததாக நினைக்கவில்லை என இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோல்வியுடன் தொடங்கிய இந்திய அணி அதன்பின் 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தும், புகழாரம் சூட்டியும் வந்தனர்.

பென் ஸ்டோக்ஸை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் அல்ல: இங்கிலாந்து முன்னாள் வீரர்
பேஷ்பால் யுக்தியால் தொலைந்து போனோம்: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியைக் காட்டிலும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி நன்றாக இருந்ததாக நினைக்கவில்லை என இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள். கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அவர்களது சிறப்பான பந்துவீச்சின் மூலம் வெற்றியை பெற்றுத் தந்தனர். ஆனால், இந்தத் தொடருக்கு முன்னதாகவே பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியால் அனைவரும் ஈர்க்கப்பட்டனர். இந்தத் தொடரின்போதும் அதனைப் பார்க்க முடிந்தது.

பென் ஸ்டோக்ஸை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் அல்ல: இங்கிலாந்து முன்னாள் வீரர்
டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு இளம் வீரர்களுக்கு ராகுல் டிராவிட் கொடுத்த அறிவுரை!

பென் ஸ்டோக்ஸை விட ரோஹித் சர்மா சிறப்பான கேப்டன் என நினைக்கவில்லை. இந்திய அணியின் பந்துவீச்சாளர்களே ரோஹித்துக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தனர். இந்திய அணியில் திறமை வாய்ந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. ரோஹித் சர்மா நன்றாக அணியை வழிநடத்துகிறார். அதனை இல்லையென்று சொல்லவில்லை. இந்த டெஸ்ட் தொடர் தோல்வியால் பென் ஸ்டோக்ஸ் மோசமாக அணியை வழிநடத்துகிறார் என்று கூறிவிட முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com