ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்!

டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக தர்மசாலாவில் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார் ரவிச்சந்திரன் அஸ்வின். அந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசில்வுட் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா 7-வது இடத்தில் உள்ளார்.

தர்மசாலா டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரோஹித் சர்மா பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தில் உள்ளார். இந்தத் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளார். ஜெய்ஸ்வால் 8-வது இடத்திலும், விராட் கோலி 9-வது இடத்திலும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com