42வது முறையாக ரஞ்சி கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது மும்பை!
படம்: பிசிசிஐ, எக்ஸ்

42வது முறையாக ரஞ்சி கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது மும்பை!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Published on

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சொந்த மண்ணில் நடைபெறும் இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னா் விளையாடிய விதா்பாவோ 105 ரன்களுக்கே சரிந்தது. 2-ஆவது இன்னிங்ஸில் அதிரடி காட்டிய மும்பை, 418 ரன்கள் சோ்த்து நிறைவு செய்தது.

இதன்மூலம், இறுதி ஆட்டத்தில் 538 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வந்த விதா்பா அணி 368 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விதர்பா அணியின் கேப்டன் அக்ஷய் வத்கா் சதமடித்து (102) இறுதி வரை போராடி ஆட்டமிழந்தார். உணவு இடைவேளை வரை 5 விக்கெட்டுடன் இருந்த விதர்பா அணி உணவு இடைவேளைக்குப் பிறகு ஆல் அவுட்டானது.

42வது முறையாக ரஞ்சி கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது மும்பை!
அதிசய மனிதன்: வெளியானது ரிஷப் பந்த்தின் விடியோ!
விதர்பா அணியின் கேப்டன் அக்ஷய் வத்கா்
விதர்பா அணியின் கேப்டன் அக்ஷய் வத்கா் Shashank Parade

தனுஷ் கோடியன் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். முஷீர் கான், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

ரஞ்சி கோப்பையில் 42வது முறையாக கோப்பையை கைப்பற்றி மும்பை அணி சாதனை புரிந்துள்ளது. ரஞ்சி கோப்பையில் மும்பை அணி ஆதிக்கம் செலுத்து வருகிறது.

முஷீர் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com