உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

அதிசய மனிதன்: வெளியானது ரிஷப் பந்த்தின் விடியோ!

இந்திய வீரர் ரிஷப் பந்த்தின் ’கம்பேக்’ கதையின் முதல் பாகத்தின் விடியோவினை வெளியிட்டுள்ளது பிசிசிஐ நிர்வாகம்.

News image

பயிற்சியில் ஈடுபட்ட ரிஷப் பந்த் புகைப்படங்கள். - படம்: பிசிசிஐ, எக்ஸ்

Updated On :14 மார்ச் 2024, 11:02 am IST

இந்திய வீரர் ரிஷப் பந்த்தின் ’கம்பேக்’ கதையின் முதல் பாகத்தின் விடியோவினை வெளியிட்டுள்ளது பிசிசிஐ நிர்வாகம்.

இந்திய வீரர் ரிஷப் பந்த்தின் ’கம்பேக்’ கதையை விடியோவாக வெளியிட்டுள்ளது பிசிசிஐ நிர்வாகம்.

ரிஷப் பந்த் கடந்த 2022 டிசம்பர் 30-ஆம் தேதி உத்தரகண்டின் ரூர்கீ பகுதியில் காரில் செல்லும்போது பயங்கர விபத்தை சந்தித்து படுகாயமடைந்தார். முழங்காலில் தீவிர காயம், மணிக்கட்டு மற்றும் கணுக்கால் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. தேவையான அறுவைச் சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு தனது முழு உடற்தகுதியை மீட்டெடுக்கும் முயற்சியில் இருந்தார் அவர்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், எதிர்வரும் ஐபிஎல் போட்டியில் விக்கெட் கீப்பர் - பேட்டராக செயல்படுவதற்கு முழு உடற்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இம்பாக்ட் பிளேயர்'-ஆக ஆட்டத்தின் இடையே அவர் களமிறக்கப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், தற்போது முழுமையான வீரராக, மீண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவே அவர் செயல்பட இருக்கிறார்.

இந்நிலையில், பிசிசிஐ புதிய விடியோ வெளியிட்டுள்ளது. இந்த விடியோவில் ரிஷப் பந்த்தின் உத்வேகம், மன உறுதி, கிரிக்கெட் ஆடுகளத்தில் மீண்டும் அவரைக் கொண்டுவரும் நோக்கத்தினைப் பற்றிய விடியோ. கொடூரமான கார் விபத்தில் இருந்து எப்படி எல்லாம் மீண்டு வந்தார் என்பதைப் பின் தொடர்ந்து இந்த விடியோவை உருவாக்கியிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மிராக்கள்மேன் என்ற இந்த விடியோவின் முதல் பாகம் இன்று (மார்ச்.14) காலை 9 மணிக்கு பிசிசிஐ.டிவி இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.