சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

எனது அம்மா இப்படித்தான் கூறுவார்: அஸ்வினின் கிண்டல் பதிவு!

தமிழக வீரர் ரவி அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் ஜாலியான பதிவினை கிண்டல் செய்துள்ளார்.

News image

அஸ்வின் - படம்: இன்ஸ்டா / அஸ்வின்

Updated On :13 மார்ச் 2024, 9:24 pm IST

தமிழக வீரர் ரவி அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் ஜாலியான பதிவினை கிண்டல் செய்துள்ளார்.

100 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள அஸ்வின் சமீபத்தில் 500 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். தற்போது ஐசிசி பௌலிங் டெஸ்ட் தரவரிசையில் 870 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

ராஜ்கோட் டெஸ்டில் இருக்கும்போது அஸ்வின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை சந்திக்க அவசரமாக கிளம்பினார். அம்மாவைப் பார்க்க சென்றபோது, “நீ இங்க என்னடா பண்ற, ஏன் டெஸ்ட் மேட்ச் விட்டு வந்த?” எனக் கேட்டுள்ளார்.

ஒரு முறை தினேஷ் கார்த்திக், “அஸ்வின் அம்மா அளவுக்கு கிரிக்கெட் அறிவு யாருக்கும் கிடையாது. எனது அம்மாவை விடவும் அவருக்கு அதிகமாகத் தெரியும். அவர்கள் சாதாராணமாகவே நீ ஏன்டா இன்னைக்கு கேரம் பால் போடலை என்றும், நீ ஏன் இன்னும் ஸ்லோயரா ஸ்பின் பண்ணியிருக்கலாமே எனப் பேசுவார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கும் அவர்களைப் பார்க்க” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் 2011இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 128 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் எடுத்திருப்பார். தற்போது முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது போட்டியிலும் 128க்கு 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார். இதனை எடிட் செய்து பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவினை அஸ்வின் பகிர்ந்து, “இத்தனை வருடமாக விளையாடி ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதுபோல எனது அம்மா கூறுவார்” என ஜாலியாக பதிவிட்டுள்ளார்.

மேலும் இன்னொரு ரசிகர் ஒருவர், “எனது அம்மா நேர்மறையானவர். குழந்தை இத்தனை வருஷமாக மாறவே இல்லை. அப்படியே இருக்கான்” எனப் பதிவிட்டதை அஸ்வின் மறுபதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.