உத்தரகண்டில் ஒரு வீடு வேண்டும் என மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரகண்டின் ஹரித்துவாரை பூர்விகமாகக் கொண்ட கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவடன், தில்லி அணிக்காக உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
தற்போது தில்லியில் வசித்து வரும் ரிஷப் பந்த், தனது பூர்விக மாநிலமான உத்தரகண்டில் குடியேற முயற்சித்து வருகிறார். ஆனால், உத்தரகண்டில் அவருக்கு நிலம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த நிலையில், உத்தரகண்டில் தனக்கு ஒரு நிலம் வேண்டும் எனக் கூறி, நள்ளிரவில் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் ரிஷப் பந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வருக்குக் கோரிக்கை விடுத்து ரிஷப் பந்த் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "உத்தரகண்டில் நிலம் வாங்குவதற்காக நீண்டகாலமாக நான் முயற்சித்து வருகிறேன். தில்லியிலிருந்து உத்தரகண்ட் மாநிலத்தில் குடியேற நான் விரும்புகிறேன்.
இதற்காக கடந்த 3 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன். ஆனால், இதுவரையில் எதுவும் கைகூடவில்லை. அரசு நிர்ணயிக்கும் நியாயமான விலையிலேயே நிலத்தை வாங்குவதற்குத் தயாராக உள்ளேன். இதில் எனக்கு உங்களின் உதவி வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
உத்தரகண்ட் மாநிலத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். என்னுடைய பூர்விக பூமியில் வசிக்கவே நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ரிஷப் பந்த்தின் கோரிக்கைக்குப் பதிலளித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது, "நம் மாநிலத்தின் பெருமை நீங்கள்தான் ரிஷப் பந்த். நீங்கள் உங்களின் பூர்விக பூமிக்கு திரும்புவது பாராட்டத்தக்கது.
உங்களின் கோரிக்கையை அதுதொடர்பான துறைசார்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். அவர்கள் உங்களைத் தொடர்புகொண்டு, இந்த விவகாரத்தில் விதிகளுக்கு உட்பட்டு உங்களுக்கு உதவுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
Summary
Rishabh Pant wants to move back home, seeks Uttarakhand CM Pushkar Singh Dhami's help
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீண்டநாள் காதலியைக் கரம்பிடித்தார் ரமன்தீப் சிங்!

சிலிண்டர் பிரச்னைக்குத் தீர்வு... அமெரிக்காவிலிருந்து 67% எல்பிஜி இறக்குமதி செய்த இந்தியா!
குல்வீர் சிங் மீண்டும் அசத்தல்... காமன்வெல்த் 5,000 மீ. ஓட்டத்தில் இந்தியாவுக்கு முதல் வெண்கலம்!

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!
விடியோக்கள்

காவிரி பிரச்னையை திசைதிருப்பவா Delimitation? - அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி



