இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரமன்தீப் சிங் தனது நீண்டநாள் காதலியான சார்லி சௌகானை கரம்பிடித்துள்ளார்.
இந்திய அணி வீரரும், ஐபிஎல் தொடரில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி வீரருமான ரமன்தீப் சிங், பஞ்சாப் அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். 29 வயதான ரமன்தீப் சிங் இந்திய அணிக்காக 2 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அதேநேரத்தில், அதிரடி பேட்டிங் மற்றும் அபாரமான ஃபீல்டிங்கிற்குப் பெயர் பெற்ற வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ரமன்தீப், 2024 ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி கோப்பையை வென்ற போட்டியில் இடம் வகித்தார்.
இவருக்கும் இவருடைய நீண்டகால காதலியும், நடிகையுமான சார்லி சௌகானுக்கும் பஞ்சாபில் உள்ள குருத்வாராவில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ் வீரர் நமன் திர், மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அஷ்வினி குமார் மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் வீரர் ஜசிந்தர் சிங் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
'கைசி யே யாரியான்' உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் பிரபலமான சார்லி சௌஹான், 'எம்டிவி ரோடீஸ் 7' நிகழ்ச்சியில் பங்கேற்றதன் வாயிலாகவும் பிரபலமானார்.
சார்லி சௌகான் முதலில் குன்வர் அமர் என்ற நடிகரைக் காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 'நாச் பலியே' நடன ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளனர். 2015 ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரமாக பிரிந்த நிலையில், சார்லியும், ரமன்தீப்பும் கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் என்னும் புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் திரை, கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
Summary
Charlie Chauhan rose to fame with television shows including Kaisi Yeh Yaariyan and Best Friends Forever. Ramandeep Singh represents Punjab in domestic cricket and the Kolkata Knight Riders (KKR) in the Indian Premier League (IPL).
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கனமழையிலும் அசத்திய குல்வீர் சிங்... காமன்வெல்த் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு முதல் வெள்ளி!

உங்கள் நல்வாழ்வே ஒளிமயமான இந்தியாவின் அடித்தளம்: யுவராஜ் சிங்

நான் இந்திய அணியில் இடம்பெற இவர்கள்தான் காரணம்; மனம் திறந்த பிரப்சிம்ரன் சிங்!

வீட்டு சமையல்காரரைத் அடித்து துன்புறுத்தியதாக பஞ்சாப் அணி வீரர் ஷஷாங் சிங் மீது வழக்குப்பதிவு!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



