இந்தியாவுக்கு 67 சதவிகித எல்பிஜியை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மேற்காசியாவில் நிலவி வந்த அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மற்றும் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளும் பாதிக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஜூன் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது போன்ற பிரச்சினைகளால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களில் இந்தியாவில் திரவ எரிபொருள் தேவையை அமெரிக்கா பூர்த்தி செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஹர்தீப் சிங் பூரி பேசுகையில், “எல்பிஜி இறக்குமதியில் சுமார் 67 சதவிகிதம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பதை இன்று உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் குறைந்த அளவில் இறக்குமதி செய்துவது குறித்து திட்டமிடப்பட்டது. ஆனால், 60 சதவிகிதத்துக்கும் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கும் ஹோர்முஸ் நீரிணை பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.
அமெரிக்காவிலிருந்து எல்பிஜி இறக்குமதி செய்யப்படும் வேளையில், வளைகுடா நாடுகளிலிருந்து வரும் எல்பிஜி இறக்குமதியில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவில் 626.03 ஆயிரம் டன்கள் எல்பிஜி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், ஜூலையில் வெறும் 102 ஆயிரம் டன்களாகக் கடுமையாகக் குறைந்துள்ளது.
கத்தாரிலிருந்து வரும் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பிப்ரவரியில் 431.02 ஆயிரம் டன்களாக இருந்த எல்பிஜி ஜூலையில் வெறும் 19.32 ஆயிரம் டன்களாக குறைந்துள்ளது.
அமெரிக்காவுடன் சேர்த்து, ஈரான், குவைத், ஓமன், பஹ்ரைன், ஈராக், அல்ஜீரியா, நைஜீரியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, மலேசியா, பங்களாதேஷ் மற்றும் எகிப்து போன்ற பிற நாடுகளிலிருந்தும் இந்தியா தனது எல்பிஜி இறக்குமதியை அதிகரித்திருக்கிறது. இதனால், சமீபத்தில் நிலவி வந்த சிலிண்டர் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது.
Summary
Union Petroleum and Natural Gas Minister Hardeep Singh Puri said India had originally planned to source only a small share of its LPG needs from the US, but that figure has now increased sharply.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குல்வீர் சிங் மீண்டும் அசத்தல்... காமன்வெல்த் 5,000 மீ. ஓட்டத்தில் இந்தியாவுக்கு முதல் வெண்கலம்!

காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
பாகிஸ்தான் அத்துமீறினால் கற்பனைக்கு அப்பாற்பட்ட பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்
மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு ‘திடீர்’ ராஜிநாமா!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



