FOLLOW US

ON GOOGLE DISCOVER

நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு ‘திடீர்’ ராஜிநாமா!

மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா செய்துள்ளதைப் பற்றி...

News image

மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு.

Updated On :24 ஜூலை 2026, 8:42 pm IST

மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையின் இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா செய்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு 75-வது பிரிவு (2) உள்பிரிவின் கீழ், பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின்படி, ரவ்நீத் சிங் பிட்டுவின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடனடியாக ஏற்றுக்கொண்டதாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி வரை ராஜஸ்தானில் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றியிருந்தார் ரவ்நீதி சிங் பிட்டு. இவர், 2024 ஆம் ஆண்டு முதல் இணையமைச்சராகவும் பணியாற்றி வந்தார். அடுத்தாண்டு பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பாஜக தயாராகி வருகிறது. இதனை மையப்படுத்தி ரவ்நீதி சிங் பிட்டு பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பஞ்சாப் தேர்தலில் சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைப்பதை பாஜக நிராகரித்த நிலையில், தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளது.

யார் இந்த ரவ்நீத் சிங் பிட்டு?

பஞ்சாபின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான பீன்ட் சிங்கின் பேரனான ரவ்நீத் சிங் பிட்டு, காங்கிரஸ் சார்பில் 3 முறை மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

2017 சட்டப்பேரவைத் தேர்தலில், ரவ்நீத் பிட்டு காங்கிரஸ் சார்பில் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தற்போதைய பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மானை எதிர்த்துப் போட்டியிட்டார்.

அப்போது அவர் சுக்பீர் சிங் பாதலிடம் தேர்தலில் தோல்வியடைந்து, பகவந்த் மானுக்குப் பின்னால் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், ரவ்நீத் சிங் பிட்டு முதல் முறையாக பாஜக சார்பில் போட்டியிட்டு பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் ராஜா வாரிங்கிடம் 20,942 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

2022 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 117 இடங்களில் போட்டிட்ட ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது பாஜக வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் தேர்தலை மையப்படுத்தி நவ்நீத் சிங் பிட்டுவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த பாஜக தீவிரம் காட்டி வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Summary

Union Minister of State for Railways, Ravneet Singh Bittu has resigned from the Union Council of Ministers, with President Droupadi Murmu accepting his resignation with immediate effect, according to a press communique issued by Rashtrapati Bhavan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.