
ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், இன்று பெங்களூரு அணியும் தங்களது பயிற்சியைத் தொடங்கிவிட்டது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் பலரும் பயிற்சி முகாமுக்கு வந்து பயிற்சியைத் தொடங்கிவிட்டனர். அணியின் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் முன்னிலையில் வீரர்கள் தங்களது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களுரு அணியுடன் இன்னும் ஒரு சில நாள்களில் விராட் கோலி இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியில் இடம்பெறாமலிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.