நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்தியா திரும்பியுள்ளார்.
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த 15ஆண்டுகளாக ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்ற ஆர்சிபி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஏற்கெனவே இறங்கிவிட்டனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஜனவரி மாதம் லண்டன் சென்ற அவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக எக்ஸ் வலைத்தளப் பதிவின் மூலம் தெரிவித்தார். இதனால் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்பாரா என்கிற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்றிரவு இந்தியா திரும்பியுள்ளார். மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆர்சிபி அணியுடன் விராட் கோலி இன்று அல்லது நாளை இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாமடைந்துள்ளனர்.
இதனிடையே ஆர்சிபி அணியின் 'அன்பாக்ஸ்' நிகழ்ச்சி பெங்களூரில் மார்ச் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்விலும் விராட் கோலி பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?
பாடல் போட்டு அவமதித்ததாக ஆர்சிபி அணி டிஜே மீது பிசிசிஐயில் புகாரளித்த சிஎஸ்கே.!

அதிரடியில் மிரட்டிய சூர்யவன்ஷி; இன்ப அதிர்ச்சியளித்த விராட் கோலி!

பெங்களூரின் அரசன்..! ஆர்சிபி வெளியிட்ட விராட் கோலியின் புதிய புகைப்படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


