பெங்களூரு அணியைக் கிண்டலடித்த ராஜஸ்தான் அணி!

மகளிர் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது பெங்களூரு அணி.
பெங்களூரு அணியைக் கிண்டலடித்த ராஜஸ்தான் அணி!
DOTCOM
Published on
Updated on
1 min read

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 2-ஆவது சீசனில், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை ஞாயிற்றுக்கிழமை வென்றது. முதலில் டெல்லி 18.3 ஓவா்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து பெங்களூா் 19.3 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் சோ்த்து வென்றது.

கடந்த சீசனில் மும்பையிடம் இறுதி ஆட்டத்தில் தோற்ற டெல்லி அணி, இந்த முறையும் துரதிருஷ்டவசமாக 2-ஆம் இடமே பிடித்தது.

ஆடவருக்கான ஐபிஎல் போட்டியில் பெங்களூா் அணி கடந்த 17 சீசன்களாக வெற்றிக்கு போராடி வரும் நிலையில், அதன் மகளிா் அணி 2-ஆவது சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூரு அணியைக் கிண்டலடித்த ராஜஸ்தான் அணி!
சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி மகளிர் அணிக்கு விடியோ காலில் விராட் கோலி வாழ்த்து

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆடவர் அணி பெங்களூரு அணியின் எக்ஸ் பக்கத்தை டேக் (tag) செய்து மீம் ஒன்றைப் பகிர்ந்துள்ளது. அதில், ஆண் ஒருவர் கேஸ் சிலிண்டரைத் தூக்க சிரமப்படுகிறார். ஆனால், வீட்டில் உள்ள பெண் சுலபமாக அதைத் தூக்கிச் செல்கிறார். இந்தப் படத்தைப் பகிர்ந்து, “வாழ்த்துக்கள்” தெரிவித்துள்ளனர்.

DOTCOM

அதவாது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணியால் சுலபமாக வாங்க முடிந்த சாம்பியன் கோப்பையை இன்றுவரை ஆண்கள் அணி வாங்கவில்லை என்பதைக் குறிப்பிடும் விதமாகக் கிண்டலடித்துள்ளனர்.

இதனைக் கண்ட ரசிகர்களில் சிலர் சிரித்தாலும், சிலர் பெங்களூரு ஆண்கள் அணியைக் கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது என வருத்தமும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com