2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் இலங்கை!
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது.


வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (மார்ச் 30) சட்டோகிராமில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியில் நிஷான் மதுஷ்கா (57 ரன்கள்), திமுத் கருணாரத்னே (86 ரன்கள்), குசால் மெண்டிஸ் (93 ரன்கள்), ஏஞ்சலோ மேத்யூஸ் (27 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
தினேஷ் சண்டிமால் 34 ரன்களுடனும், கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...