துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

டி20 உலகக் கோப்பைக்கான துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் பேசியுள்ளார்.
துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

டி20 உலகக் கோப்பைக்கான துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஹார்திக் பாண்டியா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஹார்திக் பாண்டியாவைக் காட்டிலும் ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக் கோப்பைக்கான துணைக் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!
தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு புதிய திட்டம் உள்ளது. ஹார்திக் பாண்டியா அல்லது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை உருவாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்டில் பாண்டியாவின் தொடர்ச்சியான செயல்பாடுகள் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து கேள்வி எழுந்து வருகிறது. இந்திய கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இடம்பெறுவதற்கு, உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவது என்பது முக்கியம்.

இர்பான் பதான் (கோப்புப்படம்)
இர்பான் பதான் (கோப்புப்படம்)

உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் ஒரு வீரர் மட்டும் காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணியில் இடம் பிடிக்கிறார். அப்படி நடக்கக் கூடாது. ஏனென்றால், அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு அந்த செயல் தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!
மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

கிரிக்கெட் டென்னிஸ் போட்டியைப் போன்று கிடையாது. இங்கு ஒரு அணியாக செயல்படுவது அவசியம். ஒவ்வொரு வீரரும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்திய அணியின் தொடர்ச்சிக்காக ஹார்திக் பாண்டியாவை அணியின் துணைக் கேப்டனாக நியமித்திருக்கலாம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும், ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர் ஒருவர் துணைக் கேப்டன் பதவிக்கு மோசமான தெரிவாக இருக்க மாட்டார் என நம்புகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com