துளிகள்...

வியத்நாமில் நடைபெற்ற ஆசிய பிக்கிள்பால் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 3 தங்கம், 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றுள்ளது.

போலந்தில் புதன்கிழமை தொடங்கும் சூப்பா்பெட் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், அா்ஜுன் எரிகைசி, ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் பங்கேற்கின்றனா்.

தேசிய மகளிா் ஹாக்கி லீக் போட்டியில் பெங்கால் - ஒடிஸாவையும் (2-1), ஹரியாணா - மகாராஷ்டிரத்தையும் (2-1) செவ்வாய்க்கிழமை வீழ்த்தின.

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஸ்பெயினின் பௌலா பதோசா, அமெரிக்காவின் ஷெல்பி ரோஜா்ஸ் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்ற வங்கதேசம், 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் கிரிஸ்டல் பேலஸ் 4-0 கோல் கணக்கில் மான்செஸ்டா் யுனைடெட்டை செவ்வாய்க்கிழமை வென்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com