
டி20 உலகக் கோப்பைக்கான பாபர் அசாம் தலைமையிலான 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் உலகக் கோப்பைத் தொடருக்காக தங்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். டி20 உலகக் கோப்பைக்கான அணிகளை கிட்டத்தட்ட அனைத்து நாட்டின் கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துவிட்டன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
காயம் காரணமாக நீண்ட நாள்கள் அணியில் இடம்பெறாமலிருந்த வேகப் பந்துவீச்சளார் ஹாரிஸ் ரௌஃப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி விவரம்
பாபர் அசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, ஆஸம் கான், ஃபகர் ஸமான், ஹாரிஸ் ரௌஃப், இஃப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அஃப்ரிடி, முகமது அமீர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சயீம் ஆயுப், ஷதாப் கான், ஷகின் ஷா அஃப்ரிடி மற்றும் உஸ்மான் கான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.