பிரக்ஞானந்தா, வைஷாலி அசத்தல்! தாய் நாகலட்சுமிக்கு சிறப்புப் பதிவு!

நார்வே செஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பிரக்ஞானந்தா, வைஷாலியின் தாய் நாகலட்சுமிக்கு சிறப்புப் பதிவினை பகிர்ந்துள்ளது.
பிரக்ஞானந்தா, வைஷாலி உடன் அவர்களது தாய் நாகலட்சுமி.
பிரக்ஞானந்தா, வைஷாலி உடன் அவர்களது தாய் நாகலட்சுமி. படம்: நார்வே செஸ் / எக்ஸ்

தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வைஷாலி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அக்கா வைஷாலி, தம்பி பிரக்ஞானந்தா. இருவரும் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்று கேண்டிடேட்ஸ் செஸ்ஸுக்கு தேர்வாகி அசத்தினார்கள். இவர்கள் இருவரும் முதல் முறையாக நார்வே செஸ் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்கள்.

இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மகளிர் பிரிவில் வைஷாலி, முஸிஷுக்கை வீழ்த்தினார். இதன் மூலம் 5.5 புள்ளிகளுடன் மகளிர் பிரிவில் வைஷாலி முதலிடம் பிடித்துள்ளார்.

பிரக்ஞானந்தா, வைஷாலி உடன் அவர்களது தாய் நாகலட்சுமி.
நார்வே செஸ்: கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

சகோதர சகோதரிகள் முதன்முறையாக கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று நார்வே செஸ்ஸில் விளையாடுவதும் இதுவே முதல்முறையாகும். நார்வே செஸ்ஸில் இருவரும் புள்ளிப் பட்டியலில் முதலுடம் வகித்துள்ளனர். இதனை முன்னிட்டு நார்வே செஸ் இவர்களின் தாயார் நாகலட்சுமி உடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு வாழ்த்தியுள்ளது.

நார்வே செஸ் தனது எக்ஸ் பக்கத்தில் போட்டி முடிந்த பிறகு தாய் நாகலட்சுமி இருவரின் வெற்றியினை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ள எப்போதும் காத்திருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளது.

2ஆவது சுற்றில் வைஷாலி கொனேரு ஹம்பியை முதன்முறையாக கிளாசிக்கல் போட்டியில் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com