வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

4ஆவது சுற்றில் ஹிகரு நகமுரா, கார்ல்சென், வைஷாலி அபாரம்: பிரக்ஞானந்தா பின்னடைவு!

நார்வே செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வியுற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

News image

படங்கள்: நார்வே செஸ் / எக்ஸ்

Updated On :31 மே 2024, 5:16 am

நார்வே செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வியுற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

3ஆவது சுற்றில் கார்ல்செனை வென்று முதலிடத்தில் இருந்த பிரக்ஞானந்தா 4ஆவது சுற்றில் அமெரிக்காவின் ஹிகரு நகமுராவிடம் (0-3) தோல்வியுற்றார்.

ஃபாபியோனோ கரானாவுடன் மோதிய கார்ல்சென் அசத்தல் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஹிகரு நகமுரா முதலிடம் பிடித்துள்ளார். கார்ல்சென் 3ஆவது இடமும் பிரக்ஞானந்தா 4ஆவது இடத்துக்கும் மாறினர். நடப்பு உலக சாம்பியன் டின் லிரென் கடைசி இடத்தில் இருக்கிறார்.

4ஆவது சுற்றில் மகளிர் பிரிவில் வைஷாலி அசத்தலாக விளையாடி வருகிறார். கிராம்லிங்கினை வீழ்த்தி 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தினை தக்க வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.