சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஒரு வருடத்துக்குப் பின் வந்த நெய்மர்..! அரைமணி நேரத்தில் காயத்தால் வெளியேற்றம்!

பிரபல கால்பந்து வீரர் நெய்மர் மீண்டும் காயத்தால் போட்டியிலிருந்து வெளியேறினார்.

News image
நெய்மர்- படங்கள்: எக்ஸ்/ நெய்மர்.
Updated On :5 நவம்பர் 2024, 10:16 am

DIN

பிரேஸிலின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் அல் ஹிலால் அணிக்காக விளையாடுகிறார். காயத்தினால் ஒரு வருடமாக விளையாடாமல் இருந்த நெய்மர் 2ஆவது முறையாக ஆட்டத்தில் பங்கேற்றார்.

ஆசியன் சாம்பியன் லீக் எலைட் போட்டியில் 58ஆவது நிமிடத்தில் நெய்மர் விளையாட வந்தார். 30 நிமிடங்களில் ஏசிஎல் தசைநார் பாதிப்பினால் ஆடத்தில் இருந்து வெளியேறினார்.

அல் ஹிலால் அணியின் அலெக்சாண்டர் மித்ரோவிக் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அதனால் நெய்மர் அணி 3-0 என வென்றது.

பிரேஸிலுக்காக அதிக கோல்கள் (79) அடித்தவர்கள் பட்டியலில் நெய்மர் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய மகத்தான வீரர் காயத்தினால் பல சாதனைகளை நிகழ்த்தமுடியாமல் இருக்கிறார்.

காயத்தினால் விளையாடமல் போவது இது நெய்மருக்கு முதல்முறை இல்லாவிட்டாலும் இந்தமுறை ரசிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

சமூக ஊடகங்களில், “கால்பந்து உங்களை விடும் முன்பு நீங்களாகவே கால்பந்தினை விட்டுவிடுங்கள்” எனக் கூறிவருகிறார்கள். சிலர், “ராஜாவாக முடியாத இளவரசன் நெய்மர்” எனப் புகழ்ந்து வருகிறார்கள்.

32 வயதாகும் மிகவும் திறமைசாலியான நெய்மர் 439 கோல்கள், 279 முறை கோல்கள் அடிக்க உதவியுமுள்ளார்.

இது குறித்து நெய்மர் கூறியதாவது:

எனக்கு கிராம்ப் (தசைப் பிடிப்பு) ஏற்பட்டது. ஆனால் அது மிகவும் வலுவாக உள்ளது. பரிசோதனை செய்ய வேண்டும். பெரியதாக இருக்காதென நம்புகிறேன். மருத்துவர்கள் ஏற்கனவே இது குறித்து அறிவுறுத்தினார்கள். அதனால்தான் நான் கவனமாக விளையாடினேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.