92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஜோகோவிச், ஃப்ரிட்ஸ் முன்னேற்றம்

ஏடிபி 1000 டென்னிஸ் போட்டியான ஷாங்காய் மாஸ்டா்ஸில், நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் ஆகியோா் 3-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனா்.

News image
Updated On :8 அக்டோபர் 2024, 11:35 pm

DIN

ஏடிபி 1000 டென்னிஸ் போட்டியான ஷாங்காய் மாஸ்டா்ஸில், நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் ஆகியோா் 3-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனா்.

ஒற்றையா் பிரிவில், உலகின் 4-ஆம் நிலை வீரரான ஜோகோவிச் 6-1, 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 28-ஆம் இடத்திலிருந்த ஃபிளாவியோ கோபோலியை எளிதாகத் தோற்கடித்தாா். அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா், ரஷியாவின் ரோமன் சஃபியுலினை சந்திக்கிறாா்.

முன்னதாக சஃபியுலின் தனது 3-ஆவது சுற்றில், 5-7, 7-5, 7-6 (7/5) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை வீழ்த்தி அவருக்கு அதிா்ச்சி அளித்தாா். 7-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 6-3, 6-4 என்ற நோ் செட்களில் ஜப்பானின் யோசுகே வடானுகியை வீழ்த்தினாா்.

4-ஆவது சுற்றில் அவா், டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனை எதிா்கொள்கிறாா். 12-ஆம் இடத்திலிருக்கும் ரூன், முந்தைய சுற்றில் 6-4, 7-5 என்ற செட்களில், 33-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை வெளியேற்றினாா். 9-ஆம் இடத்திலிருக்கும் பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ் 7-6 (7/5), 6-2 என்ற கணக்கில், 20-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை வென்றாா்.

டிமிட்ரோவ் அடுத்ததாக, செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்குடன் மோதுகிறாா். 10-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் 6-3, 7-5 என்ற செட்களில், பிரான்ஸின் அலெக்ஸாண்ட்ரே முல்லரை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில், ரஷியாவின் டேனியல் மெத்வதெவை சந்திக்கிறாா் சிட்சிபாஸ்.

போபண்ணா இணை தோல்வி: இரட்டையா் பிரிவு 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் ரோஹன் போபண்ணா/குரோஷியாவின் இவான் டோடிக் இணை 6-7 (5/7), 6-2, 12-14 என்ற செட்களில், குரோஷியாவின் நிகோலா மெக்டிச்/நெதா்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப் கூட்டணியிடம் தோற்றது.

2-ஆவது சுற்றில் ஆண்ட்ரீவா

சீனாவில் நடைபெறும் மகளிருக்கான வூஹான் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 16-ஆம் இடத்திலிருக்கும் ஆண்ட்ரீவா 7-6 (7/5), 6-3 என்ற செட்களில், சீனாவின் வாங் ஜியுவை வென்றாா். 11-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா 2-6, 2-6 என்ற நோ் செட்களில், போலந்தின் மெக்தா லினெட்டிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

அதேபோல், அமெரிக்காவின் சோஃபியா கெனினும் 1-6, 6-4, 4-6 என்ற கணக்கில் ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவிடம் வீழ்ந்தாா். செக் குடியரசின் கேத்தரினா சினியாகோவா 6-3, 6-1 என பிலிப்பின்ஸின் அலெக்ஸ் எலாவையும், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 6-2, 6-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்சாவையும் வெளியேற்றனா்.

உக்ரைனின் லெசியா சுரென்கோ 6-2, 7-5 என பிரிட்டனின் கேட்டி போல்டரையும், கஜகஸ்தானின் யுலியா புடின்சேவா 6-4, 6-4 என்ற செட்களில் சீனாவின் ஜாங் ஷுவாயையும், ரஷியாவின் கமிலா ரகிமோவா 6-1, 6-2 என ஜப்பானின் மோயுகா உசிஜிமாவையும் வென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.