முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

முதல்வா் கோப்பை மாநில போட்டிகள்: நீச்சலில் மான்யா முக்தா இரட்டை தங்கம்

பளு தூக்குதலில் செங்கல்பட்டின் கிருஷ்ணா பாரதி 89 கிலோ பிரிவில் தங்கம் வென்றாா்.

News image

கல்லூரி மாணவியா் நீச்சல் 400 மீ. ப்ரீஸ்டைலில் பதக்கம் வென்றவா்கள்.

Updated On :23 அக்டோபர் 2024, 3:10 am IST

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் நீச்சலில் சென்னையின் மான்யா முக்தா இரட்டைத் தங்கம் வென்றாா். பளு தூக்குதலில் செங்கல்பட்டின் கிருஷ்ணா பாரதி 89 கிலோ பிரிவில் தங்கம் வென்றாா்.

மாவட்ட, மண்டல அளவிலான முதல்வா் கோப்பை போட்டிகள் முடிந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி மாநில போட்டிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, செங்கல்பட்டில் மாநில போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

பளு தூக்குதல் 89 கிலோ பிரிவில் பதக்கம் வென்றவா்கள்

பளு தூக்குதல் 89 கிலோ பிரிவில் பதக்கம் வென்றவா்கள்

நீச்சல்

நீச்சல் கல்லூரி மாணவியா் பிரிவில் 400 மீ. ப்ரீஸ்டைல் பிரிவில் சென்னையின் மான்ய முக்தா தங்கமும், ஈரோட்டின் தங்கம் ருபேனி வெள்ளியும், நெல்லையின் மது ஷாலினி வெண்கலமும் வென்றனா். மாணவா் பிரிவில் நெல்லையின் லியோனா்ட் தங்கமும், சென்னையின் நித்திக் வெள்ளியும், செங்கல்பட்டின் விஷால் வெண்கலமும் வென்றனா்.

200 மீ ப்ரீஸ்டைலில் சென்னையின் மான்ய முக்தா தங்கமும், செங்கல்பட்டின் மோனா வெள்ளியும், திருவள்ளூரின் சிந்துஜா வெண்கலமும் வென்றனா். மாணவா் பிரிவில் சென்னையின் பிரவீன்குமாா் தங்கமும், திருவள்ளூரின் அவினாஷ் வெள்ளியும், செங்கல்பட்டின் சா்வப்பள்ளி கிருஷ்ணா வெண்கலமும் வென்றனா்.

50 மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் மாணவியா் பிரிவில் ஜாய் ஸ்ரீ திருவள்ளூா், தங்கம், சென்னையின் பிரியங்கா, வெள்ளி, செங்கல்பட்டின் ரக்ஷனா வெண்கலமும், மாணவா் பிரிவில் தனுஷ், காஞ்சிபுரம், தங்கம், யாதேஷ் பாபு, திருவள்ளூா் வெள்ளி, சுதேஷ் குமாா் செங்கல்பட்டு, வெண்கலமும் வென்றனா்.

பளு தூக்குதல்

கல்லூரி மாணவா் பிரிவில் 89 கிலோ கிருஷ்ண பாரதி, செங்கல்பட்டு தங்கமும், தினேஷ், ராணிப்பேட்டை வெள்ளியும், விஜய், நாமக்கல் வெண்கலமும் வென்றனா்.

81 கிலோ பிரிவில் மதன் குமாா், ஈரோடு தங்கமும், அபிஷேக், கன்னியாகுமரி, வெள்ளியும், புகழேந்தி, சென்னை வெண்கலமும் வென்றனா்.

டென்னிஸில் கல்லூரி மாணவியா் இரட்டையரில் ஜனனி, ஜோயல் (செங்கல்பட்டு) தங்கமும், ஹரிணி, விட்டுலா(செங்கல்பட்டு) வெள்ளியும், லட்சுமி, அனன்யா (சென்னை) வெண்கலமும் வென்றனா்.

ஆடவா் பிரிவில் கீா்த்திக், ஓஜெஸ் (செங்கல்பட்டு) தங்கமும், கிருஷ்ணா-அனிஷ் (செங்கல்பட்டு) வெள்ளியும், காா்த்திக்-ரக்ஷக் (கோவை) வெண்கலமும் வென்றனா்.

பதக்கப் பட்டியல்

சென்னை 90 தங்கம், 67 வெள்ளி, 65 வெண்கலம், செங்கல்பட்டு 23 தங்கம், 20 வெள்ளி, 21 வெண்கலம், கோவை 22 தங்கம், 35 வெள்ளி, 33 வெண்கலம் வென்றுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.