பாராலிம்பிக்: கிளப் எறிதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி!

பாராலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வென்றது பற்றி...
paralympic
தரம்வீர், பிரணவ் சர்மாModi/X
Published on
Updated on
1 min read

பாரீஸில் நடைபெறும் பாராலிம்பிக்கில் ஆடவர் கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.

ஆடவர் கிளப் எறிதல் எஃப் 51 பிரிவில் இந்தியாவின் தரம்வீர் தங்கப் பதக்கமும், பிரணவ் சர்மா வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

34.92 மீட்டர் தொலைவுக்கு கிளப்பை எறிந்து புதிய சாதனையை படைத்துள்ளார் தரம்வீர். வெள்ளிப் பதக்கம் வென்ற பிரணவ், 34.59 மீட்டர் எறிந்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து

கிளப் எறிதல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற தரம்வீர் மற்றும் பிரணவுக்கு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வீரர்களை வாழ்த்தி பிரதமர் மோடி தெரிவித்ததாவது:

“கிளப் த்ரோவில் தங்கத்தை வென்றதன் மூலம் வரலாற்றை உருவாக்கியுள்ளார் தரம்வீர். இந்த அசாத்தியமான சாதனைக்குக் காரணம் அவரது அசைக்க முடியாத ஆற்றல் ஆகும். இந்த சாதனையால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “வெள்ளிப் பதக்கம் வென்ற பிரணவுக்கு வாழ்த்துகள், அவரது வெற்றி எண்ணற்ற இளைஞர்களை ஊக்குவிக்கும். அவரது விடாமுயற்சி போற்றத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

paralympic
பாராலிம்பிக் வில்வித்தை: தங்கம் வென்ற முதல் இந்தியர்!

ஒரே நாளில் 6 பதக்கங்கள்

பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்கள் நேற்று ஒரே நாளில் தடகளத்தில் மட்டும் 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்று அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து, வில்வித்தை இறுதிப் போட்டியில் பங்கேற்ற ஹர்வீந்தர் சிங் தங்கப் பதக்கத்தை வென்றார். வில்வித்தை பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

13-ஆவது இடம்

பாராலிம்பிக்கில் இதுவரை 24 பதங்களை வென்றுள்ள இந்திய அணி 13-வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இதில், 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com