செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய வீரர் அர்ஜுன் எரிகாஸி உலகின் நம்பர் 3 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்திய கிராண்ட்மாஸ்டரான அர்ஜுன் எரிகைஸி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அனைத்து சுற்றுக்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் உலகின் சிறந்த செஸ் வீரர்கள் தரவரிசையில் நம்பர் 3 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜுன், தரவரிசைப் பட்டியலில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை முந்தி 3-வது இடத்தை தனதாக்கினார்.
ஸ்லோவேனியாவின் ஜான் சுபெல்ஜுக்கு எதிராக வெற்றிபெற்றதன் மூலம் அவர் தனிப்பட்ட சிறந்த நிலையில் 2797.2 புள்ளிகளை எட்டியுள்ளார். இதன்மூலம் உலகத் தரவரிசைப் பட்டியலில் அதிகப் புள்ளிகள் பெற்ற இந்திய செஸ் வீரர் என்ற சாதனைக்கும் அர்ஜுன் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
20 வயதான அர்ஜுனைவிட ஹிகாரு நகமுரா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.
அர்ஜுனைத் தொடர்ந்து மற்றொரு இந்தியரான குகேஷும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் அவர் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
உலக செஸ் தரவரிசைப் பட்டியல் (முதல் 5 இடங்கள்)
1. மாக்னஸ் கார்ல்சன் - 2830.82
2. ஹிகாரு நகமுரா - 2802.03
3. அர்ஜுன் எரிகைஸி - 2797.24
4. ஃபேபியானோ கருவானா - 2795.85
5. குகேஷ் - 2794.1