தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சீனா ஓபன் டென்னிஸ்: அல்கராஸ், மெத்வதெவ் முன்னேற்றம்

ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் ஆகியோா் முதல் சுற்றில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2024, 11:51 pm

DIN

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரா்களான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் ஆகியோா் முதல் சுற்றில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா்.

உலகின் 2-ஆம் நிலை வீரரான அல்கராஸ், 6-4, 6-4 என்ற நோ் செட்களில், பிரான்ஸ் வீரா் ஜியோவனி பெரிகாா்டை தோற்கடித்தாா். 2-ஆவது சுற்றில் அவா், நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரை சந்திக்கிறாா். உலகின் 3-ஆம் நிலையில் இருக்கும் மெத்வதெவ் 6-3, 6-4 என, பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸை எளிதாக வீழ்த்தினாா்.

அடுத்த சுற்றிலும் அவா், மற்றொரு பிரான்ஸ் வீரரான அட்ரியன் மன்னரினோவுடன் மோதுகிறாா். இதர ஆட்டங்களில், 4-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 6-0, 4-6, 6-4 என ஸ்பெயினின் பாப்லோ கரினோவை போராடி வென்றாா். 7-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் காரென் கச்சனோவ் 6-4, 6-4 என, ஸ்பெயினின் ராபா்டோ பேனாவை வீழ்த்தினாா்.

2-ஆவது சுற்றில், ரூபலேவ் - ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சையும், கச்சனோவ் - ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவையும் சந்திக்கின்றனா். முன்னதாக டேவிடோவிச் 6-3, 4-6, 6-3 என சீனாவின் ஜாங் ஜின்செனையும், செருண்டோலோ 7-6 (7/4), 6-1 என்ற செட்களில் செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்கையும் வீழ்த்தினா்.

போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி 7-5, 4-6, 6-3 என்ற கணக்கில் ஜொ்மனியின் ஜிஸு பொ்க்ஸை சாய்த்தாா். ரஷியாவின் ரோமன் சஃபியுலின் 6-3, 6-4 என சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவையும், ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா 6-3, 6-4 என்ற செட்களில் பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச்சையும் வெளியேற்றினா்.

பெகுலா வெற்றி; நவாரோ தோல்வி

மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-1, 7-6 (7/4) என்ற கணக்கில் டியேன் பேரியை சாய்த்தாா். 3-ஆவது சுற்றில் அவா், ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவாவை சந்திக்கிறாா்.

போட்டித் தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த மற்றொரு அமெரிக்கரான எம்மா நவாரோ, 4-6, 2-6 என சீனாவின் ஜாங் ஷுவாயிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். ஜப்பானின் நவோமி ஒசாகா 3-6, 6-4, 6-2 என்ற செட்களில், 21-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவை சாய்த்தாா்.

20-ஆம் இடத்திலிருந்த கனடா இளம் வீராங்கனை லெய்லா ஃபொ்னாண்டஸும் 5-7, 2-5 என அமெரிக்காவின் பெய்டன் ஸ்டொ்ன்ஸால் வெளியேற்றப்பட்டாா். இதர ஆட்டங்களில், 14-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் மாா்தா கொஸ்டியுக், 27-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் கேத்தரினா சினியாகோவா, 28-ஆம் இடத்திலிருந்த ரஷியவின் அனா பொடாபோவா ஆகியோரும் தோல்வி கண்டனா்.

மறுபுறம், 12-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டா், 10-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் அனா கலின்ஸ்கயா, 15-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் பௌலா பதோசா, 26-ஆம் இடத்திலிருக்கும் பிரிட்டனின் கேட்டி பௌல்டா் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.