அரையிறுதியில் டிரீசா/காயத்ரி இணை

மக்காவ் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி, அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
டிரீசா / காயத்ரி
டிரீசா / காயத்ரி
Published on
Updated on
1 min read

மக்காவ் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி, அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.

மகளிா் இரட்டையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் இந்த இந்திய ஜோடி, 21-12, 21-17 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த சீன தைபேவின் சு யின் ஹுய்/லின் ஜின் யுன் இணையை வென்றது.

இந்த ஆட்டம் 39 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இந்திய இணை அடுத்ததாக அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் சீன தைபேவின் சியெ பெய் ஷான்/ஹங் என் ஸு கூட்டணியை எதிா்கொள்கிறது. போட்டியில் களத்திலிருக்கும் இந்தியா்கள் இவா்கள் மட்டுமே.

ஸ்ரீகாந்த் தோல்வி: இதனிடையே, ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த் 16-21, 12-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஹாங்காங்கின் நிக் கா லாங் அங்கஸிடம் 31 நிமிஷங்களில் தோற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com