2025 சாம்பியன்ஷிப்தான் அடுத்த இலக்கு: அடுத்த பதக்கத்துக்கு ஈட்டி எறியும் நீரஜ் சோப்ரா!

அடுத்தாண்டு நடைபெறும் உலக தடகளப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
Neeraj Chopra
நீரஜ் சோப்ரா (கோப்புப் படம்)X | Neeraj Chopra
Published on
Updated on
1 min read

அடுத்தாண்டு நடைபெறும் உலக தடகளப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஹரியாணாவில் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமையில் `மிஷன் ஒலிம்பிக் 2036` மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக் வீரர் நீரஜ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, செய்தியாளர்களிடம் நீரஜ் சோப்ரா தெரிவித்ததாவது ``அடுத்த ஒலிம்பிக் தொடங்க இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன. ஆகையால், அடுத்த ஆண்டுக்கான மிகப்பெரிய இலக்கு, டோக்கியோவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் ஆகும்; அதற்கான ஏற்பாடுகளை இப்போது தொடங்குவோம்.

ஒலிம்பிக் போட்டியின்போது ஏற்பட்ட காயம், இப்போது நன்றாக உள்ளது. புதிய சீசனுக்கு 100 சதவீதம் உடற்தகுதியுடன் வருவேன். இனிவரும் காலங்களில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் வலுவான செயல்திறனை காட்டி, பல பதக்கங்களை வெல்வோம்’’ என்று கூறியுள்ளார்.

உலக தடகளப் போட்டிகள், டோக்கியோவில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 13 முதல் 21 வரை நடைபெற உள்ளன.

பெல்ஜியம் நாட்டின் புரூசல்ஸ் நகரில், செப். 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில், கரீபிய தீவு நாடான கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 87.87 மீட்டர் தூரம் வீசியதன்மூலம் தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஆனால், நீரஜ் சோப்ரா 87.86 மீட்டர் தூரத்திற்கு மட்டுமே எறிந்ததால், துரதிர்ஷ்டவசமாக, வெள்ளிப் பதக்கத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடிக்க நேர்ந்தது.

இருப்பினும், போட்டியின்போது நீரஜ் சோப்ரா காலிலும், இடுப்பிலும் உள்காயத்துடன் இந்தத் தொடரில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com