பதக்கம் வென்ற அர்ஜூன், ஹரிகாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு: தெலங்கானா முதல்வர் வழங்கினார்!

செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற அர்ஜூன், ஹரிகாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற அர்ஜூன், ஹரிகாவுக்கு பரிசு வழங்கிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற அர்ஜூன், ஹரிகாவுக்கு பரிசு வழங்கிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.படம் | telangana cmo
Published on
Updated on
1 min read

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற அர்ஜூன், ஹரிகாவுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ரூ.25 லட்சம் பரிசு வழங்கினார்.

நெய் என நாம் சாப்பிடுவது எல்லாம் நெய்தானா?

ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன்களான இந்திய ஆடவா் மற்றும் மகளிா் அணிகளில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அா்ஜுன் எரிகைசி, டி.ஹரிகா ஆகியோருக்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ரொக்கமாக ரூ.25 லட்சம் வழங்கி கௌரவித்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 97 ஆண்டுகால வரலாற்றில் இந்தியா தங்கம் வென்றது இதுவே முதல் முறையாகும். அதிலும், ஒரே போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது.

கண்டெய்னர் லாரியில் தப்பிய கொள்ளையர்கள்! நாமக்கல் போலீஸ் என்கவுன்டர்!

இந்தப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் மாநில விவசாய அமைச்சர் தும்மல நாகேஸ்வர ராவ் மற்றும் பிற உயரதிகாரிகள் முன்னிலையில் செஸ் வீரர்களை முதல்வர் பரிசு வழங்கி கௌரவித்தார்.

இந்நிலையில், நாடு திரும்பிய சாம்பியனான அணியினருக்கு தில்லியில் புதன்கிழமை பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்ற போது அகில இந்திய செஸ் சம்மேளனம் ரூ.3.2 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் அருகே பிடிபட்ட கண்டெய்னர் லாரி: பவாரியா பாணியில் கொள்ளைக் கும்பல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com