திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமிநாா்வே அரசா் ஹரால்டு காலமானார்! அரசராக பட்டத்து இளவரசர் ஹாகோன் பொறுப்பேற்புதிபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!

பும்ராவிடம் கேட்காமலே இதனைக் கூறிவிட்டார்கள்: ரவி சாஸ்திரி

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் விளையாட எப்போதும் ஆர்வமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

Published On :11 பிப்ரவரி 2024, 10:30 pm IST

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் விளையாட எப்போதும் ஆர்வமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் அபார பந்துவீச்சுத் திறமையை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இந்தப் போட்டிக்குப் பிறகு ஐசிசியின் டெஸ்ட் போட்டிக்கான சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையிலும் முதலிடம் பிடித்து அசத்தினார். டெஸ்ட் தரவரிசையில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்த பும்ராவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் விளையாட எப்போதும் ஆர்வமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ராவிடம் முதல் முறையாக பேசியது எனக்கு ஞாபகமிருக்கிறது. அப்போது நான் கொல்கத்தாவில் இருந்தேன். டெஸ்ட் போட்டிகள் விளையாட உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா எனக் கேட்டேன். அதற்கு பதிலளித்த பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் நாள் என்னுடைய வாழ்நாளின் மிகப் பெரிய நாள் என பதிலளித்தார். அவர் வெள்ளைப் பந்து போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துபவர் என்ற பெயர் உருவாகிவிட்டது. அவரிடம் கேட்காமலே அந்தப் பெயர் அவருக்கு உருவாகிவிட்டது. ஆனால், அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட எந்த அளவுக்கு ஆர்வமாக இருந்தார் என்பது எனக்குத் தெரியும். டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தயாராக இருங்கள் என அவரிடம் நான் கூறினேன். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற உற்சாகமும், ஆர்வமும் அவரிடம் அதிகமாக இருந்தது என்றார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் பும்ரா அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.