திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமிநாா்வே அரசா் ஹரால்டு காலமானார்! அரசராக பட்டத்து இளவரசர் ஹாகோன் பொறுப்பேற்புதிபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!

சர்வதேச டி20 போட்டிகளில் 5-வது முறையாக சதம் விளாசிய மேக்ஸ்வெல்: மே.இ.தீவுகளுக்கு 242 ரன்கள் இலக்கு!

மேக்ஸ்வெல்லின் அதிரடியான சதத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20  போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4  விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்துள்ளது.

கோப்புப்படம்

Published On :12 பிப்ரவரி 2024, 9:57 am IST

மேக்ஸ்வெல்லின் அதிரடியான சதத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20  போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4  விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று (பிப்ரவரி 11) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. 

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 22 ரன்களிலும், ஜோஷ் இங்லிஷ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாடினர். இருப்பினும், மார்ஷ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டொய்னிஸ் 16 ரன்களில் ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல்லுடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். தனது அதிரடியான பேட்டிங்கால் மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சாளர்களை மேக்ஸ்வெல் திணறடித்தார். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடிக்கடி பறந்தன. ருத்ரதாண்டவமாடிய மேக்ஸ்வெல் சதம் விளாசி அசத்தினார். அவர் 55 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 8  சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடி காட்டிய டிம் டேவிட் அவரது பங்குக்கு 14 பந்துகளில் 31  ரன்கள் குவித்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அல்சாரி ஜோசப் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

242  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், டி20 தொடரை இழக்காமலிக்க இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் மேற்கிந்தியத் தீவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.