
முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் காயம் காரணமாக ஆடுகளத்தை விட்டு வெளியேறிய பிறகு, அணியை சிறப்பாக வழிநடத்தி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக அமைந்தார் டீன் எல்கர். முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாடி 185 ரன்கள் எடுத்த டீன் எல்கருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணியை டீன் எல்கர் வழிநடத்தினார்.
இதையும் படிக்க: கேப்டவுனில் வென்ற முதல் ஆசிய அணி: இந்தியா அபார வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே டீன் எல்கர் அறிவித்திருந்தார்.

2வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஓய்வு பெறும் டீன் எல்கருக்கு விராட் கோலி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசளித்தார். ரோஹித் சர்மா இந்திய அணியினரின் கையெழுத்துகள் அடங்கிய டி ஷர்டினை பரிசளித்து கௌரவித்தார்.

86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள எல்கர் 5,347 ரன்களுடன் ஓய்வு பெறுகிறார். இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதும் அவருக்கே கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் இதனைப் பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.
Rohit Sharma gifted Dean Elgar a signed Indian team jersey by all players.
â Johns. (@CricCrazyJohns) January 4, 2024
Virat Kohli gifted his signed Test jersey to Dean Elgar.
The mutual respect. pic.twitter.com/hx5kUzXMgB
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






