இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலிடம் பிடித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 3-வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட்டின் தோல்விக்கு இதுதான் காரணம்: கே.எல்.ராகுல்
இந்த நிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலிடம் பிடித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குப் பிறகு டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய அணி தற்போது மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக இந்திய அணி 118 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டதாலும், இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 1-1 என சமன் செய்ததாலும் ஆஸ்திரேலிய அணி தரவரிசையில் முன்னேறியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஹேசில்வுட் ஹாட்ரிக் விக்கெட்: தடுமாற்றத்தில் பாகிஸ்தான்!
ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் ஆஸ்திரேலியா (118 புள்ளிகள்), இந்தியா (117 புள்ளிகள்), இங்கிலாந்து (115 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா (106 புள்ளிகள்) மற்றும் நியூசிலாந்து (95 புள்ளிகள்) அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


