ஹேசில்வுட் ஹாட்ரிக் விக்கெட்: தடுமாற்றத்தில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் அசத்தலாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை எடுத்தார். 
ஹேசில்வுட் ஹாட்ரிக் விக்கெட்: தடுமாற்றத்தில் பாகிஸ்தான்!

சிட்னியில் புதன்கிழமை தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அடுத்து ஆடிய ஆஸி. 299 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தொடங்கினார்கள். 

3ஆம் நாள் முடிவில் 26 ஓவரில் 68 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது பாகிஸ்தான். ஆஸ்திரேலியாவின் சார்பில் ஜோஸ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை எடுத்து ஜோஸ் ஹேசில்வுட் அசத்தினார். W 0 W 0 W 0 என ஒரே ஓவரில் முக்கியமான 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தினை மாற்றினார். 

ரிஸ்வான் 6 ரன்கள், ஆமீர் ஜமால் ரன்னேதுமின்றி களத்தில் இருக்கிறார்கள். 82 ரன்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். நாளை இந்தப் போட்டி முடிவுக்கு வந்துவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

எப்படி இருப்பினும் ஏற்கனவே 2-0 என தொடரினை ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com